அரசாங்கம் நீண்டகால அடிப்படையில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக அதிகரிக்கத் திட்டம்

அரசாங்கம் நீண்டகால அடிப்படையில் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அண்ணளவாக 20 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
மத்தியகால அடிப்படையில், அரசாங்கம் அரச வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 16.0 சதவீதமாகப் பேண எதிர்பார்க்கிறது.
நிதி அமைச்சின் அண்மைய அறிக்கை, வருவாய் வளர்ச்சி மற்றும் செலவினங்களைச் சீரமைப்பதன் மூலம் மத்தியகால அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 23 சதவீத முதன்மை உபரியைப் பேண அரசாங்கம் எதிர்பார்ப்பதைக் காட்டுகிறது.
கூடுதலாக, வரி முறையின் முற்போக்குத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை மேம்படுத்தும் வகையில், நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கு இடையிலான விகிதம் மத்திய மற்றும் நீண்டகால அடிப்படையில் 40:60 ஆக படிப்படியாகச் சரிசெய்யப்பட உள்ளது.