அரச ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம்: பொது நிதி பலவீனங்களே காரணம்

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பரந்தளவிலான போராட்டங்கள், ஜே.வி.பி./என்.பி.பி. அரசாங்கத்தின் மிகக் கடினமான சவாலாக உருவெடுத்துள்ளன.
நாட்டின் பொது நிதியில் உள்ள அடிப்படைக் குறைபாடுகள் காரணமாக இந்த கோரிக்கைகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
வட்டி கொடுப்பனவுகள், அரச துறை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள், பாதுகாப்பு மற்றும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களுக்கான பெரும் செலவினங்களே இந்த நிதி நெருக்கடிக்குக் காரணமாகும்.