79ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளன

இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் 2027 பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக 'த மோனிங்' செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அலரி மாளிகையில் 2026 நவம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கொண்டாட்டங்களின் தொனிப்பொருள், ஏற்பாட்டு ஒழுங்குகள், நிகழ்வு நிரல் மற்றும் மத அனுஷ்டானங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர்களான ஹிணிதும சுனில் சேனவி, வசந்த சமரசிங்க, சந்தன அபயரத்ன, மற்றும் சமந்த வித்தியாரத்ன ஆகியோருடன் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகரவும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். நிதி, பாதுகாப்பு, கல்வி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளும் மேல் மாகாண சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.