சப் கிண்ண கால்பந்து: இந்திய அணி 10ஆவது தடவையாக சம்பியன்; பாகிஸ்தானை 2-1 என வென்றது

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 15ஆவது சப் கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 10ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியை 10,000க்கும் அதிகமான ரசிகர்கள் கண்டுகளித்தனர். முதல் பாதியின் மேலதிக நேரத்தில் பாகிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியின் நடுப்பகுதியில், பாகிஸ்தான் அணியின் ஜுனைட் மொஹமட் ஷாவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டதால், பாகிஸ்தான் அணி 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது.
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சில சிரேஷ்ட வீரர்கள் இல்லாத 17 பேர் கொண்ட இந்திய அணி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரண்டாம் பாதியில் இரண்டு கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது.
இறுதிப் புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தையும், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை மற்றும் மாலைதீவுகள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றன.