தேசிய சேமிப்பு வங்கி குழுமம் 2026 முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 45.8 பில்லியன் இயக்க இலாபத்தை பதிவு செய்தது

தேசிய சேமிப்பு வங்கி குழுமம் 2026 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ. 45.8 பில்லியன் இயக்க இலாபத்தை ஈட்டியுள்ளது. குழுமத்தின் நிகர வட்டி வருமானம் 7.4% அதிகரித்து ரூ. 69.1 பில்லியனாக உயர்ந்துள்ளதுடன், மொத்த இயக்க வருமானம் 3.6% அதிகரித்து ரூ. 71.2 பில்லியனாக வளர்ந்துள்ளது.
குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 34.7 பில்லியனை எட்டியுள்ளது, இது 2025 ஆம் ஆண்டில் ரூ. 34.8 பில்லியனாக இருந்தது. வரிக்குப் பிந்தைய இலாபம் ரூ. 20.7 பில்லியனாக பதிவாகியுள்ளது. மொத்த சொத்துக்கள் ரூ. 1.92 டிரில்லியனை எட்டியுள்ளதுடன், பங்கு மூலதனம் 8.7% அதிகரித்து ரூ. 139.05 பில்லியனாக உயர்ந்துள்ளது.
வங்கியின் நிகர இயக்க வருமானம் 6.4% அதிகரித்து ரூ. 73.9 பில்லியனாக உயர்ந்துள்ளது, இதற்கு ரூ. 4.1 பில்லியன் நிகர குறைமதிப்பீட்டு மீள்வு உதவியுள்ளது. வரிக்கு முந்தைய இலாபம் 1.1% அதிகரித்து ரூ. 33.7 பில்லியனாக உயர்ந்துள்ளதுடன், வரிக்குப் பிந்தைய இலாபம் ரூ. 20 பில்லியனாக பதிவாகியுள்ளது.
தலைவர் கலாநிதி ஹர்ஷா கப்ரால், இந்த முடிவுகள் முக்கிய வணிகத்தின் மீள்தன்மை, பொது சேமிப்புகளின் விவேகமான நிர்வாகம் மற்றும் மேம்பட்ட சொத்துத் தரத்துடன் விரிவாக்கப்பட்ட கடன் வழங்கல் ஆகியவற்றை பிரதிபலிப்பதாகக் கூறினார்.