பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக சுதந்திர சதுக்கத்திலிருந்து காலி முகத்திடல் வரை பெப்ரல் சைக்கிள் ஓட்டம்

பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை (பெப்ரல்) 2026 நவம்பர் 27 அன்று ஏற்பாடு செய்தது.
சுதந்திர சதுக்கத்திலிருந்து காலி முகத்திடல் வரை சைக்கிள் ஓட்டம் மூலம் இந்த பிரச்சாரம் நடத்தப்பட்டது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.