மட்டக்களப்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு விசேட பூசைகள், சொக்கப்பனை கொழுத்துதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்துக்களின் திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு ஆலயங்கள் தோறும் விசேட பூசைகள் நடைபெற்றன. அத்துடன், வீடுகளில் பாரம்பரிய விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன், ஆலயம் ஒளியூட்டப்பட்டது. விசேட கிரியைகளைத் தொடர்ந்து, ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனைக்கு சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு, சொக்கப்பனை கொழுத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நவம்பர் 24ஆம் திகதி இந்து பக்தர்கள் தமது வீடுகளில் பாரம்பரிய விளக்குகளை ஏற்றி விசேட பூசைகளிலும் ஈடுபட்டனர்.