தேசிய விளையாட்டு விழாவில் மத்திய, தென் மாகாணங்கள் ரக்பி தங்கப் பதக்கங்களை வென்றன

கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 50ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் ரக்பி தங்கப் பதக்கத்தை மத்திய மாகாணமும், பெண்கள் ரக்பி தங்கப் பதக்கத்தை தென் மாகாணமும் வென்றன.
ஆண்கள் இறுதிப் போட்டியில் மத்திய மாகாணம் 24-10 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாணத்தை தோற்கடித்தது. வடமத்திய மாகாணத்தை 34-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தென் மாகாணம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பி.எச்.டி.எம். ஹெட்டியாராச்சி போட்டியின் மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
பெண்கள் பிரிவில் தென் மாகாணம் 24-7 என்ற புள்ளிகள் கணக்கில் மேல் மாகாணத்தை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. வடமேல் மாகாணம் மத்திய மாகாணத்தை 27-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தென் மாகாணத்தைச் சேர்ந்த கே.பி. தில்கி பிரசஞ்சலி சத்ஸரணி மிகவும் பெறுமதி வாய்ந்த வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.
எட்டு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 180 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.