திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் கசிவு; இலங்கை கடலோர காவல்படை துப்புரவு பணிகளை ஆரம்பித்தது

திருகோணமலை துறைமுகத்தின் பூம் கோவ் (Boom Cove) பகுதியில் நவம்பர் 28 அன்று காலை 7:30 மணியளவில் ஏற்பட்ட சிறிய எண்ணெய் கசிவைத் தொடர்ந்து இலங்கை கடலோர காவல்படை துப்புரவு நடவடிக்கையை ஆரம்பித்தது.
சுமார் ஏழு மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் அகலமும் கொண்ட எண்ணெய் படிமத்தை அகற்றுவதற்காக ஆறு பேர் கொண்ட கடலோர காவல்படை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டது.
கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், எண்ணெய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் உறிஞ்சும் பொருட்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.