நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றாவது வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது மூன்றாவது வரவுசெலவுத் திட்டத்தை 2026 நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இது தேர்தல் விஞ்ஞாபன உறுதிமொழிகளை நிறைவேற்றுவதையும், 2024ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதியளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதுள்ள திட்டங்கள் சமூகங்களுக்கு அளவிடக்கூடிய நன்மைகளை வழங்குவதற்காக ஒரு சீரான தேசிய அபிவிருத்தி கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று டெய்லி எப்.டி. (Daily FT) பத்திரிகை கருத்துத் தெரிவித்திருந்தது.
இந்தத் திட்டங்களில் “சுபீட்சமான தேசம் – அழகான வாழ்வு” என்ற தேர்தல் விஞ்ஞாபனம், டிஜிட்டல் பொருளாதாரம், பிரஜைகள் சக்தி, தூய இலங்கை மற்றும் நிலையான அபிவிருத்தி சபையின் பணிகள் என்பன அடங்கும்.