மின் கட்டமைப்பை வலுப்படுத்த 26.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு

தேசிய மின் கட்டமைப்பில் தொடர்ச்சியான செயலிழப்புகளைத் தடுப்பதற்காக 26.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட உரையை முன்வைத்த போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
மின் தடைகளைத் தவிர்ப்பதற்காக விரிவான பிராந்திய கண்காணிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.