கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவி 65,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

கொழும்பு வடக்கு காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி 65,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவாகரத்துத் தீர்ப்பை தாமதமின்றி விரைவுபடுத்துவதற்காக சந்தேகநபர்கள் இலஞ்சம் கோரியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிபதியின் மனைவி காதி நீதிமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். சந்தேகநபர்கள் நவம்பர் 19ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.