26 வருடங்களின் பின்னர் அமெரிக்கா அம்மை நோய் ஒழிப்பு அந்தஸ்தை இழந்தது

பான் அமெரிக்க சுகாதார அமைப்புடன் இணைந்த ஒரு சுயாதீன நிபுணர் குழு, அமெரிக்கா 2000 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாகப் பேணி வந்த அம்மை நோய் ஒழிப்பு அந்தஸ்தை இனிமேல் கொண்டிருக்கவில்லை என்று தீர்மானித்துள்ளது.
தடுப்பூசி விகிதங்கள் குறைந்து வருவதையும், நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதையும் அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் 5,400 க்கும் மேற்பட்ட அம்மை நோயாளிகளும் குறைந்தது 10 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இது 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த வருடாந்த மொத்த எண்ணிக்கையாகும்.
சுகாதாரத் தரவுகளின்படி, பெரும்பாலான நோயாளிகள் MMR தடுப்பூசியைப் பெறாதவர்களிடையே ஏற்பட்டனர். ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரை 600 க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பதிவு செய்த உட்டா உட்பட பல மாநிலங்களில் இந்த நோய் பரவியுள்ளது. அத்துடன் தென் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கொன்சின் மற்றும் நியூயோர்க் ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.