சத்திய சாயி பாபாவின் 101ஆவது அவதார தினம் நவம்பர் 23ஆம் திகதி கொழும்பில் அனுஷ்டிப்பு

பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா சமிதி, கொழும்பு, பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 101ஆவது அவதார தினத்தை முன்னிட்டு நவம்பர் 23ஆம் திகதி நகர் முழுவதும் பக்திபூர்வமான நிகழ்வுகளை நடாத்தும்.
கொழும்பு 7 இல் உள்ள சாயி மந்திர் காலை 5 மணி முதல் காலை 8.30 மணி வரை கொண்டாட்டங்களை ஆரம்பிக்கும். கொழும்பு 6 இல் உள்ள இந்து மகளிர் கல்லூரியில் உள்ள சிவானந்த நிலையம் காலை 5 மணி முதல் காலை 6 மணி வரையிலும், காலை 10.30 மணி முதல் நண்பகல் வரையிலும் நிகழ்வுகளை நடாத்தும்.
இந்நிகழ்வுகள் கொழும்பு 6 இல் உள்ள இராமகிருஷ்ண மிஷனில் மாலை 5 மணி முதல் இரவு 8.45 மணி வரை நிறைவடையும்.
இந்நிகழ்வுகளில் பஜனைகள், நகர சங்கீர்த்தனம், வேத பாராயணம், ஊர்வலங்கள், இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறும். பக்தர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளுமாறு சமிதி அழைப்பு விடுத்துள்ளது.