அக்கரைப்பற்று பாடசாலை நூலகருக்கு சிறந்த பாடசாலை நூலக நடைமுறைகளுக்கான தேசிய விருதை பிரதமர் வழங்கினார்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சிறந்த நூலக நடைமுறைகளுக்கான தேசிய விருதை பிரதமர் ஹரிணி அமரசூரிய நவம்பர் 15 அன்று எம். ஏ. ரமீஸுக்கு வழங்கினார்.
பாடசாலையின் நூலகப் பொறுப்பாளர், ஊடகக் கற்கைகள் ஆசிரியர் மற்றும் சிரேஷ்ட பத்திரிகையாளர் எனப் பணியாற்றும் ரமீஸ், விருதையும் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
கல்லூரி அதிபர் ஏ. எஸ். நசீபாவின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வுகளில் அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.