அரசாங்க கணினி கொள்வனவுகளுக்காக 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ரூ. 6,700 மில்லியன் ஒதுக்கீடு

2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், அரசாங்க நிறுவனங்களில் உள்ள பழைய கணினிகளுக்குப் பதிலாக புதிய கணினிகளை கொள்வனவு செய்வதற்காக மொத்தமாக ரூ. 6,700 மில்லியன் (ரூ. 670 கோடி) ஒதுக்கப்படவுள்ளது.
இந்தத் தொகையானது, மாற்றீடுகளை வழங்குவதற்காக ரூ. 4,500 மில்லியன் (ரூ. 450 கோடி) ஒதுக்கீட்டையும், மேலும் ரூ. 2,200 மில்லியன் (ரூ. 220 கோடி) மேலதிக ஒதுக்கீட்டையும் உள்ளடக்கியுள்ளது.