இலங்கையில் HSBC வங்கியுடன் இணைந்து 5 மில்லியன் டொலர் ரூபா வசதியை IFC அறிமுகப்படுத்தியுள்ளது

சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனமும் (IFC) HSBC இலங்கையும் இணைந்து 5 மில்லியன் டொலருக்கு சமமான ஆறு வருட நிலையான வட்டி வீத கடன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது உலக வங்கி குழுமத்தின் இலங்கையிலுள்ள முதலாவது ரூபா வசதியாகவும், ஆசியாவில் முதலாவதாகவும் அமைந்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் திறைசேரியினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த வசதி மற்றும் மேலதிக உள்ளூர் நிதிகள், இலங்கையின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றிற்கு 10 வருட கால, 10 மில்லியன் டொலர் ரூபா அடிப்படையிலான கடனை ஆதரிக்கின்றன.
இது IFC இன் நீண்ட கால ரூபா கடனாகவும், அண்மைய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டில் அதன் முதலாவது உட்கட்டமைப்பு முதலீடாகவும் அமைந்துள்ளது. இது உள்ளூர் நிறுவனங்களை வெளிநாட்டு நாணய அபாயங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பரிவர்த்தனை, 2024 இல் கென்யாவிலும் 2026 இல் தென்னாபிரிக்காவிலும் IFC மற்றும் சிட்டி வங்கி (Citi) ஆகியவற்றால் நிறுவப்பட்ட இதேபோன்ற கடன் வசதிகளைத் தொடர்ந்து வந்துள்ளது.