BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் CINEC Campus இனால் 1,800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்

CINEC Campus இன் வருடாந்த பட்டமளிப்பு விழா நவம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏழு பீடங்கள் மற்றும் ஒரு துறையைச் சேர்ந்த 1,800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
பொறியியல், வர்த்தகம் மற்றும் முகாமைத்துவம், கணினி, சுகாதார விஞ்ஞானங்கள், கடல்சார் விஞ்ஞானங்கள், கடல்சார் பொறியியல், மனிதநேயம் மற்றும் கல்வி, விமானப் பராமரிப்புப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டதாரிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.
CINEC இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கெப்டன் அஜித் பீரிஸ் மற்றும் பிரதித் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஆகியோர் ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனாவில் உள்ள இணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து நிகழ்வுக்குத் தலைமை தாங்கினர்.