முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஸ்தாபகர் இம்ரான் கான், அவசர மருத்துவ சிகிச்சை இன்றி கடுமையான சுகாதார அபாயங்களை எதிர்கொள்கிறார் என்று அவரது தலைமை வழக்கறிஞர் சல்மான் சஃப்தர் தெரிவித்தார்.
சமீபத்திய சிறை விஜயத்தைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்குப் பேசுகையில், கான் மூளை இரத்தக் கசிவு அல்லது மாரடைப்பு ஏற்படும் தீவிர ஆபத்தில் இருப்பதாக சஃப்தர் கூறினார்.
கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் நிலை குறித்து சஃப்தர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார், அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும், அவர்களைப் பரிசோதிக்க ஒரு சுயாதீன மருத்துவக் குழுவை நியமிக்கவும் கோரினார்.
புஷ்ரா பீபியின் மோசமடைந்து வரும் கண்பார்வை குறித்தும் வழக்கறிஞர் கவலை தெரிவித்தார்.