இளம் வயதினர் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இலங்கை மாணவர்கள் உலகளவில் மிகவும் நம்பிக்கையானவர்கள் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளனர்

ஒக்ஸ்போர்ட் ஸ்கொலாஸ்டிக்கா அகாதமியினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய ஆய்வில், அண்மைய பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், இலங்கை மாணவர்கள் உலகிலேயே மிகவும் நம்பிக்கையானவர்கள் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக 5 இற்கு 4.32 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு 100 நாடுகளைச் சேர்ந்த 1,433 மாணவர்களை மதிப்பீடு செய்ததுடன், போதுமான பதில்களைக் கொண்ட 41 நாடுகளை பகுப்பாய்வு செய்தது. தனிப்பட்ட வாய்ப்புகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல், அரசியல் மற்றும் சமூகம் தொடர்பான இளைஞர்களின் நம்பிக்கையை இது அளவிட்டது.
இலங்கை இளைஞர்கள் சுற்றுச்சூழல் நம்பிக்கைக்கான மிக உயர்ந்த புள்ளியான 4.62 ஐப் பதிவுசெய்ததுடன், தனிப்பட்ட நம்பிக்கை 4.75 ஆகவும், சமூக நம்பிக்கை 4.25 ஆகவும் இருந்தது.
கென்யா ஒட்டுமொத்தமாக 4.31 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து நேபாளம், கசாக்ஸ்தான், நைஜீரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பிடித்தன. கனடா 4.08 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் குவைத் மிகக் குறைந்த நம்பிக்கையாக 2.92 ஐப் பதிவுசெய்தது.
அகாதமியின் இணைப் பணிப்பாளர் லவினியா அபெல் கருத்துத் தெரிவிக்கையில், செயற்கை நுண்ணறிவு, மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற சவால்களை இளைஞர்கள் எதிர்கொள்கின்றனர்.