தேடப்பட்ட ஐந்து சீனப் பிரஜைகள் நவம்பர் 26 அன்று இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்ட ஐந்து சீனப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வெலிசறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 26 ஆம் திகதி இரவு இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
சீன அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குடிவரவு அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் வைத்து குறித்த நபர்களைக் கைது செய்தனர். நாடு கடத்துவதற்கான விமானக் கட்டணத்தை சீன அரசாங்கம் செலுத்தியது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரண்டு விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்ட ஐந்து பேரையும் எட்டு இலங்கை குடிவரவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். மூவர் இரவு 8:50 மணிக்கு சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6018 மூலம் ஷாங்காய்க்கு ஐந்து அதிகாரிகளுடன் அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ள இருவர் இரவு 10:25 மணிக்கு ஏர் சீனா விமானம் CA-426 மூலம் செங்டூவுக்கு மூன்று அதிகாரிகளுடன், சீன குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவிருந்தனர்.