இலங்கையில் மின்சார பஸ் உற்பத்தி வசதியை அமைக்க அவுஸ்திரேலியாவின் கஸ்டம் டென்னிங் முன்மொழிவு

அவுஸ்திரேலிய பஸ் உற்பத்தி நிறுவனமான கஸ்டம் டென்னிங், உள்நாட்டு பொதுப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளுக்கான மின்சார பஸ்களை உற்பத்தி செய்வதற்காக இலங்கையில் ஒரு வசதியை நிறுவுவதற்கு முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டம், நாட்டில் மின்சார பஸ் உற்பத்தியில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக இருக்கும். இது உள்ளூர் சேசிஸ் மற்றும் உடல் உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு உதிரிபாக விநியோகஸ்தர்களை உருவாக்குதல் என்பவற்றில் கவனம் செலுத்தும்.
தற்போதுள்ள தாழ்தள டீசல் பஸ்களுடன் ஒப்பிடுகையில், கஸ்டம் டென்னிங்கின் மின்சார பஸ்கள் 15 ஆண்டுகளில் மொத்த ஆயுட்காலச் செலவுகளில் சுமார் 50% சேமிப்பை வழங்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உருவாக்குவதற்காக, ஒரு ஐரோப்பிய தொழில்நுட்ப வழங்குநருடன் இணைந்து உள்ளூர் மின்கலத் தொகுப்புத் தொழிலை அமைப்பதற்கும் நிறுவனம் முன்மொழிகிறது.