பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவை 25,000 ரூபாவால் அதிகரிக்க ஜனாதிபதி யோசனை

உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான மாதாந்த கல்விசார் கொடுப்பனவை 25,000 ரூபாவால் அதிகரிக்க வரவுசெலவுத் திட்ட யோசனைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
25,000 ரூபா அதிகரிப்பில் பாதி, அதாவது 50% ஜூலை 2027 முதல் வழங்கப்படவுள்ளதுடன், மீதமுள்ள 50% ஜூலை 2028 முதல் வழங்கப்படும்.
சிறப்பு நிபுணர்களை ஈர்க்கும் வகையில், வெளி பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,500 இலிருந்து ரூ. 4,500 ஆக மூன்று மடங்காக அதிகரிக்கவும், செய்முறைப் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான மணிநேரக் கொடுப்பனவு ரூ. 600 இலிருந்து ரூ. 1,800 ஆக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கூடுதலாக, தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் வெளி விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 100% அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.