அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வரவுசெலவுத் திட்டம் இறுதித் தீர்வாக அமையாது – அமைச்சர் லால் காந்த

தேசிய வரவுசெலவுத் திட்டத்தினால் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால் காந்த நவம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சில பிரச்சினைகள் அமைச்சு மட்டக் கலந்துரையாடல்கள் அல்லது சம்பள ஆணைக்குழு மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், தொழிற்சங்கங்களுக்கு விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் போராடவும் உரிமை உண்டு என்றும், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகள் எதுவாக இருந்தாலும் தொழிற்சங்கங்கள் எப்போதும் பிரச்சினைகளைக் கண்டறியும் என்றும் கூறினார்.
சமுர்த்தி பிரதேச செயலக கொடுப்பனவுகள் ரூ. 2,000 இலிருந்து ரூ. 4,000 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், நகர அலுவலக கொடுப்பனவுகள் ரூ. 2,500 இலிருந்து ரூ. 5,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் லால் காந்த குறிப்பிட்டார். அத்துடன், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் அவர் எடுத்துரைத்தார்.