ரணில் விக்கிரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க மீதான வழக்கு டிசம்பர் 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக டிசம்பர் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் புதன்கிழமை (11) உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து பதில் நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். விக்கிரமசிங்க மற்றும் ஏக்கநாயக்க இருவரும் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக லண்டன் செல்வதற்கு 16.6 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.