விரிவாக்கப்பட்ட மூலதன ஆதாய வரிக்கு மதிப்பீட்டு விதிகளை வெளியிடவுள்ளது உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
கிரிப்டோகரன்சிகள், ஒலிபரப்பு உரிமங்கள், இரத்தினக்கற்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் மீதான மூலதன ஆதாய வரிக்கு மதிப்பீட்டு வழிகாட்டல்களை இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தும் என சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன டெலாய்ட் இணையக் கருத்தரங்கில் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், நிலம், கட்டிடங்கள் மற்றும் பங்குகளுக்கு அப்பால் டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் சொத்துக்கள், தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு உரிமங்கள், இரத்தினக்கற்கள், நகைகள் மற்றும் பெறுமதிமிக்க உலோகங்கள் ஆகியவற்றை உள்ளடக்குவதற்கு வரி விதிக்கக்கூடிய மூலதனச் சொத்துக்களை விரிவுபடுத்த முன்மொழிகிறது.
தற்போது, தனிநபர்களுக்கு 15 சதவீதமும், நிறுவனங்களுக்கு 30 சதவீதமும் மூலதன ஆதாயங்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு சொத்து வகைகளுக்கும் முறையான மதிப்பீட்டு முறைகளை நிறுவுவதற்கு ஆணையாளர் நாயகத்திற்கு வரவிருக்கும் திருத்தம் அதிகாரம் அளிக்கும் என்று விஜேவர்தன கூறினார்.
உண்மையான வணிக இணைப்புகளை வரி-நடுநிலை பரிவர்த்தனைகளாகக் கருதும் அதேவேளை, திரட்டப்பட்ட வரி இழப்புகளை உறிஞ்சுவதற்காக மட்டுமே நோக்கம் கொண்ட செயற்கையான கூட்டுத்தாபன ஏற்பாடுகளைத் தடுக்கும் வகையில் முன்மொழியப்பட்ட வரி தவிர்ப்பு எதிர்ப்பு விதிகள் அமையும் என்றும் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.