இலங்கை முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை எச்சரிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் அவதானிக்கப்பட்ட காலை நேரப் பனிமூட்டம், வாகனப் புகை, தூசி மற்றும் உள்ளூர் உமிழ்வுகளுடன் முதன்மையாக எல்லை தாண்டிய மாசினால் ஏற்படும் காற்றின் தரம் மோசமடைவதே இதற்குக் காரணம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவைகள் நவம்பர் 19 அன்று இரத்து செய்யப்பட்டன.
நவம்பர் 18 அன்று அதிகார சபையினால் வெளியிடப்பட்ட காற்றின் தரவு, 151 முதல் 200 வரையான காற்றுத் தரச் சுட்டெண் மட்டங்களைப் பதிவுசெய்தது, இது அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. யாழ்ப்பாணம் 186, கிளிநொச்சி 170, பத்தரமுல்லை 166, அனுராதபுரம் 165, சிலாபம் 162, திருகோணமலை 156 மற்றும் அக்கரைப்பற்று 154 ஐ எட்டியது.
பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்கவும், வெளியே முகக்கவசம் அணியவும், மூச்சுத் திணறல் அல்லது ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.