பொது நிதி பற்றிய குழுவினால் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான கடன் திட்டம் மற்றும் கடன் முகாமைத்துவ யோசனைக்கு அங்கீகாரம்
2026 அக்டோபர் 20 அன்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய பொது நிதி பற்றிய குழு, 2026 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க துணை மதிப்பீட்டிற்கும், 2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின் கீழான யோசனைக்கும் அங்கீகாரம் வழங்கியது.
இந்த அங்கீகாரங்கள் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான கடன் திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன. காத்திருப்புப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நிதியுதவிகள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய கொள்முதல் சட்டம் தொடர்பான வரைவுப் பணிகளின் முன்னேற்றத்தையும் குழு ஆய்வு செய்ததுடன், தற்போது 19 அமைச்சுகளின் கீழ் 394 அலகுகளை உள்ளடக்கிய PROMIS கொள்முதல் டிஜிட்டல்மயமாக்கல் அமைப்பையும் மதிப்பீடு செய்தது.
4.5 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கி மானியத்தின் ஆதரவுடன், PROMIS ஆனது 2027 ஆம் ஆண்டிற்குள் மாகாண சபைகள் மற்றும் அனைத்து திணைக்களங்களுக்கும் விரிவுபடுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான கொள்முதல் தாமதங்களைக் குறைப்பதன் அவசரத் தேவையையும் குழு வலியுறுத்தியது.