2027 வரவுசெலவுத் திட்டத்தில் 750,000 மாணவர்களுக்கு அகலப்பட்டை வவுச்சர்களை ஜனாதிபதி அறிவித்தார்

தெரிவுசெய்யப்பட்ட 750,000 பிள்ளைகளுக்கு அகலப்பட்டை வவுச்சர்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை 2026 நவம்பர் 12 அன்று சமர்ப்பித்தபோது திஸாநாயக்க இந்த நடவடிக்கையை அறிவித்தார்.