கிராமிய தொழில்முனைவோருக்கு 5 மில்லியன் ரூபா சலுகைக் கடன் திட்டத்தை ஜனாதிபதி முன்மொழிந்தார்

சமுர்த்தி வங்கி ஊடாக தொழில்முனைவோருக்கு 5 மில்லியன் ரூபா வரையிலான சலுகைக் கடன்களை வழங்குவதற்கான வரவுசெலவுத் திட்ட யோசனையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்தக் கடன்களுக்கு 4% வருடாந்த வட்டி அறவிடப்படுவதுடன், அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் அதேவேளை கிராமிய தொழில்முனைவோரை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வசதியைப் பெறுவதற்கு, தொழில்முனைவோர் குறைந்தது ஐந்து அஸ்வெசும பயனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
வட்டி மானியங்களுக்காக முன்மொழியப்பட்ட 200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் மூலம், மொத்தமாக 5,000 மில்லியன் ரூபா கடன் தொகையை விநியோகிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.