அபாயகரமான வாகன செலுத்துகைக்காக ரஹீம் ஸ்டெர்லிங்கிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கிற்கு அபாயகரமான வாகன செலுத்துகைக்காக 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லிங் இரண்டு ஆண்டுகளுக்கு வாகன செலுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டதுடன், 100 மணிநேர ஊதியம் இல்லாத வேலைகளைச் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையில், 31 வயதான அவர் மே 28 அன்று நெடுஞ்சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தி, பின்னர் லம்போர்கினி காரை விபத்துக்குள்ளாக்கியதை ஒப்புக்கொண்டார். இந்த விபத்து காரின் நான்கு சக்கரங்களுக்கும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதால், அவரால் மேலும் வாகனத்தைச் செலுத்த முடியவில்லை.
தவறான உள்ளிழுப்பிற்காக நைட்ரஸ் ஆக்சைடு வைத்திருந்ததையும், பகுப்பாய்வுக்காக ஒரு மாதிரியை வழங்கத் தவறியதையும் ஸ்டெர்லிங் ஒப்புக்கொண்டார்.