கல்வி ஒதுக்கீட்டிற்கான வரவுசெலவுத் திட்டக் குறைப்புக்களுக்கு எதிராக பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க IUSF தீர்மானம்

கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளில் வரவுசெலவுத் திட்டக் குறைப்புக்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்கு எதிராக பல்கலைக்கழக மட்டத்திலான ஆர்ப்பாட்டங்களை ஆரம்பிக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கல்விச் செலவினம் 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட 2.04 சதவீதத்திலிருந்து வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1.91 சதவீதமாகக் குறைந்துள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக கல்வி நிதியை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்ததாகவும், பிரதமர் ஹரினி அமரசூரிய ஆரம்பத்தில் தமது முதல் வரவுசெலவுத் திட்டத்தில் 2.5 சதவீதத்தை உறுதியளித்ததாகவும் ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்தார்.