பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு 12.5 பில்லியன் ரூபா கடன் திட்டத்தை ஜனாதிபதி முன்மொழிந்தார்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, 2026 நவம்பர் 12 அன்று பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தபோது, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக 12.5 பில்லியன் ரூபா குறைந்த வட்டி கடன் திட்டத்தை முன்மொழிந்தார்.
சமூர்த்தி வங்கி மூலம் குழு கடன் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், ஒரு மில்லியன் ரூபா வரையான கடன்களை 3 சதவீத வருடாந்த சலுகை வட்டி விகிதத்தில் வழங்கும்.
இந்த முன்முயற்சி, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை, குறிப்பாக கிராமப்புறங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த வாழ்க்கைத்தரத்துடன் வாழ்பவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக, வட்டி மானியங்களுக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மேலதிக ஏற்பாடுகளும் உறுதியளிக்கப்பட்டுள்ளன.