நவம்பர் 28 அன்று பல மாகாணங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நவம்பர் 28 அன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், தீவின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், கடல்சார் முன்னறிவித்தல்களின்படி, சுற்றியுள்ள கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், மணிக்கு 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.