உள்நாட்டு எரிவாயு விலை உயர்வுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க CAA இற்கு பாராளுமன்றக் குழு வலியுறுத்தல்

பாராளுமன்றச் சூழல், விவசாயம் மற்றும் வள நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, உள்நாட்டு எரிவாயு விலை உயர்வுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு (CAA) வலியுறுத்தியுள்ளார்.
ஒரு தனியார் எரிவாயு விநியோகஸ்தரால் மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பு தொடர்பாக அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். எரிவாயு விலைகளை நிர்ணயிக்கும் சட்ட அதிகாரம் அதிகாரசபைக்கு இல்லை என்றாலும், அது தலையிட்டதன் விளைவாக நிறுவனம் விலைகளைக் குறைத்தது என்று CAA தலைவர் தெரிவித்தார்.
சந்தையில் தமது சிறிய பங்கின் காரணமாக அதிக விலைக்கு எரிவாயு வாங்க வேண்டியுள்ளதாக விநியோகஸ்தர் விளக்கினார். நுகர்வோருக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் அதேவேளை, உள்நாட்டு எரிவாயு விநியோகத்தில் தடையின்மையை உறுதிப்படுத்துமாறு குழு வலியுறுத்தியது.