பெலியகொட சுங்கக் கிடங்கில் 181.93 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருள் பறிமுதல்

பெலியகொடவில் உள்ள சுங்கக் கிடங்கொன்றில் இருந்து 181.93 மில்லியன் ரூபா பெறுமதியான 18.193 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மூன்று பொதிகளுக்குள் இந்தப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த பொதிகளைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்வதற்காக சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் விசேட பரிசோதனையொன்றை மேற்கொண்டபோது அவற்றை தடுத்து வைத்துள்ளனர்.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எவரும் பொதிகளைப் பெற்றுக்கொள்ள வராததையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளுடன் இணைந்து அதிகாரிகள் அவற்றை திறந்துள்ளனர். மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கப் பிரிவினர் இந்தப் போதைப்பொருள் தொகையை பணியகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.