கோட்டாபய ராஜபக்ஷவின் கைதுக்கு எதிரான மேன்முறையீட்டை மார்ச் 5ஆம் திகதி பரிசீலிக்கும் உச்ச நீதிமன்றம்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தனது கைதுக்குத் தடை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மார்ச் 5ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 25ஆம் திகதி திகதியிட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைதுக்குத் தடை விதிக்குமாறு கோரிய அவரது ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து ராஜபக்ஷ மேன்முறையீடு செய்தார்.
நீதியரசர்களான மஹிந்த சமரவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய அமர்வு, மனு தொடர்பான விடயங்களை அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு பணித்தது.