சுகாதார அமைச்சுக்கு 2027ஆம் ஆண்டுக்கு 590 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, 2027ஆம் ஆண்டுக்கான அமைச்சுக்கு 590 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பத்து வருட தேசிய சுகாதாரக் கொள்கை இறுதி செய்யப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒக்டோபர் 30ஆம் திகதி களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனத்தில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, பயிற்சி, வதிவிட மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஆரம்பித்து வைத்தார். உலக வங்கி உதவியுடன் கூடிய ஆரம்ப சுகாதார முறைமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 176 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவை அமைக்கப்பட்டன.
ஆரம்ப சுகாதாரத் திட்டத்திற்காக 52 பில்லியன் ரூபாவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் நிலை மருத்துவமனைத் திட்டத்திற்காக 31 பில்லியன் ரூபாவும், JICA இன் கீழ் மூன்றாம் நிலை மருத்துவமனை அபிவிருத்திக்காக 25 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.