2027 வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்காக 749 பில்லியன் ரூபாவுக்கும் மேல் ஒதுக்கீடு

2027 வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்காக 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக, அதாவது மொத்த அரச செலவினத்தில் 12% இற்கும் மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இன மற்றும் மத சமூகங்களிடையேயும் கலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 7 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2027 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், சினிமா டிக்கெட்டுகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT) முழு டிக்கெட் பெறுமதிக்கும் பதிலாக ஒவ்வொரு தரப்பினரும் பெறும் பகுதிக்கு மட்டுமே விதிக்கப்படும். அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அகராதிகள் பெறுமதி சேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியப் பாதுகாப்பிற்காக, அனுராதபுரம் வரலாற்று புனித நகரத்தை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார நிதியிலிருந்து 1,076 மில்லியன் ரூபாவுடன் 500 மில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.