கிராமிய தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணத்திற்கு 5 வருட வரிச்சலுகை – 2027 வரவுசெலவுத் திட்டம் யோசனை

கிராமியப் பகுதிகளில் அதிவேக இணைய வசதிகளை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு ஐந்தாண்டு வரிச்சலுகையை 2027 வரவுசெலவுத் திட்டம் முன்மொழிந்துள்ளது.
ஒவ்வொரு கோபுரத்திற்கும் அதன் செலவில் 75 சதவீதம் அல்லது ரூ. 35 மில்லியன், இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிவேக அகன்ற அலைவரிசை வசதிகளை விஸ்தரிப்பதற்கு 2027 முதல் 2030 வரையான காலப்பகுதியில் 700 முதல் 800 புதிய கோபுரங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.