கடற்கரையை சுத்தம் செய்யும் சுமார் 80 தொழிலாளர்கள் MEPA ஆல் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

இலங்கையின் கரையோரப் பகுதியிலிருந்து பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக நியமிக்கப்பட்ட சுமார் 80 தற்காலிகத் தொழிலாளர்கள், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) தங்களுக்கு எந்தக் காரணமும் தெரிவிக்காமல் பணிநீக்கம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
MSC ELSA 3 கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, இந்தத் தொழிலாளர்கள் துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.