2027 வரவுசெலவுத் திட்டம்: தர்ம பாடசாலை ஆசிரியர்களின் கொடுப்பனவு 12,500 ரூபாவாக அதிகரிப்பு

தகுதிவாய்ந்த தர்ம பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த ஒருமுறை கொடுப்பனவை அதிகரிப்பதற்கு 2027 வரவுசெலவுத் திட்டம் முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவின் கீழ், கொடுப்பனவு 7,500 ரூபாவில் இருந்து 12,500 ரூபாவாக அதிகரிக்கப்படும்.