காலி நடமாடும் தபால் ரயில் சேவைக்கு 100 ஆண்டுகள்: காலி ரயில் நிலையத்தில் நிகழ்வு

காலி நடமாடும் தபால் ரயில் சேவை நவம்பர் 17 ஆம் திகதியுடன் 100 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது. இதனையிட்டு காலி ரயில் நிலையத்தில் நினைவு நிகழ்வொன்று இடம்பெற்றது.
காலி அதன் இறுதி கரையோரப் பாதையாகக் கொண்ட இரவு நடமாடும் தபால் ரயில் நள்ளிரவில் வந்தடைந்ததுடன், நிலைய அதிபர் எஸ். மென்டிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளால் வரவேற்கப்பட்டது.
ரயில்வே திணைக்களம் மற்றும் காலி தபால் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நூற்றாண்டு காலமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட சேவையைப் பாராட்டி கேக் வெட்டினர்.