2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக இரண்டாவது வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மையத்தை வெரிடே ரிசேர்ச் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுமக்களையும் நிறுவனங்களையும் அழைக்கும் வகையில், வெரிடே ரிசேர்ச் நிறுவனம் தனது 'வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மையத்தின்' இரண்டாவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாக வெற்றிகரமாக அமைந்த முதல் பதிப்பைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் பதிப்பில், இலங்கை இலவங்கப்பட்டை மருத்துவப் பொருட்களுக்கான தேசிய திட்டம் முதல் பேருந்து நிலையங்களில் கழிப்பறைகள் அமைப்பது வரையிலான பல்வேறு யோசனைகள் பெறப்பட்டன.
வரவுசெலவுத் திட்டச் செயற்பாடுகளில் இலங்கையின் பலவீனமான பொதுமக்களின் பங்கேற்புக்கு இந்த மையம் தீர்வு காண்கிறது: 2025ஆம் ஆண்டுக்கான திறந்த வரவுசெலவுத் திட்ட ஆய்வில் நாடு 100க்கு 9 புள்ளிகளை மட்டுமே பெற்றது. முழுமையான முன்மொழிவைச் சமர்ப்பித்தல், அபிவிருத்தி உதவிக்கான யோசனையைப் பகிர்தல் அல்லது பதிவேற்றப்பட்ட முன்மொழிவுகளுக்கு வாக்களித்தல் என மூன்று வழிகளில் இந்தத் தளத்தில் ஈடுபடலாம்.