ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரைக்கும் ஆவணங்களுக்கும் இடையில் முரண்பாடுகள்: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குழு நியமனம்

ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்ட உரை, வரவுசெலவுத் திட்ட ஆவணங்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
2026 நவம்பர் 13 அன்று நடைபெற்ற அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த விடயம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை 2026 நவம்பர் 17 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட 2026 நவம்பர் 19 ஆம் திகதி அவசர மத்திய குழுக் கூட்டத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.