அவுஸ்திரேலிய செனட்டர் பாத்திமா பேமன் தனது கைக்குழந்தையுடன் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்

அவுஸ்திரேலிய செனட்டர் பாத்திமா பேமன் தனது கைக்குழந்தையான ஆலியாவை கைகளில் ஏந்தியவாறு பாராளுமன்ற அமர்வில் உரையாற்றினார்.
முக்கிய தொழில்நுட்ப தளங்களை இணையவழித் தீங்குகளுக்குப் பொறுப்பாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இணையப் பாதுகாப்புத் திருத்த (டிஜிட்டல் கடமைப் பொறுப்பு) சட்டமூலம் 2026 தொடர்பான செனட் விவாதத்தில் அவர் பங்கேற்றார்.
2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில், பதவியில் இருக்கும்போது குழந்தை பெற்ற முதல் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் என்ற பெருமையை பேமன் பெற்றார். 2022 இல் அவுஸ்திரேலிய தொழிலாளர் கட்சி சார்பில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் தனது சொந்த அரசியல் இயக்கமான அவுஸ்திரேலியாவின் குரலைத் தொடங்கினார்.