கலை, கலாசார மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் புனரமைப்புக்கு 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது

பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களுடன் தொடர்புடைய கலை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 7,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
2027ஆம் ஆண்டில் அனுராதபுரம் புனித நகர புனரமைப்புக்காக மத்திய கலாசார நிதியம் 1,076 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதேவேளை, நகர அபிவிருத்தி அதிகார சபை மதிப்பிடப்பட்ட 8,200 மில்லியன் ரூபாவில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிந்துள்ளது.
யதிவர மாபிய நிவாச திட்டத்தை 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தித்வா அனர்த்தத்தால் சேதமடைந்த 1,328 மத வழிபாட்டுத் தலங்களைச் செப்பனிடுவதற்கு அரசாங்கம் 722 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இதில் 758 பௌத்த விகாரைகள், 272 இந்து ஆலயங்கள், 199 முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் 99 கிறிஸ்தவ தேவாலயங்கள் அடங்கும்.
தற்போதைய புனரமைப்புப் பணிகளில் புத்தசாசன நிதியிலிருந்து 40 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 30 பௌத்த விகாரைகளும், மத்திய கலாசார நிதியிலிருந்து 523 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் தொல்பொருள் வழிபாட்டுத் தலங்களும் அடங்கும்.