இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிவாரணங்களுடன் பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளத்தை வரவுசெலவுத் திட்டம் இடுகின்றது – அனில் ஜயந்த

பாராளுமன்றத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, வரவுசெலவுத் திட்டம் என்பது அரசாங்க வருவாயை விநியோகிப்பது மட்டுமல்ல என்று தெரிவித்தார்.
வருமானத்தை விநியோகிக்கும் வரவுசெலவுத் திட்டங்களுக்கு மக்கள் பழக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய வரவுசெலவுத் திட்டம் தகுதியான, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குழுக்களுக்கு நிவாரணம் வழங்கும் அதேவேளை பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளத்தை எவ்வாறு இடுவது என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறினார்.