இந்திய நிறுவனத்துடன் தொடர்புடைய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு எதிராக வசந்த முதலிகே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சவால்

ஜன போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, அரசாங்கத்தின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு சவால் விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் வயதுவந்த சனத்தொகையின் உயிரியல் தரவுகளை இந்திய நிறுவனமொன்றிற்கு வழங்குவதன் மூலம் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முடிவுக்கு மனு சவால் விடுகிறது.
அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.