பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நான்கு திருத்தங்களுடன் நிறைவேற்ற உயர் நீதிமன்றம் அனுமதி

பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் சட்டமூலத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் நவம்பர் 12 அன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
எவ்வாறாயினும், குழுநிலை விவாதத்தின் போது நான்கு திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது.
சபாநாயகரின் கூற்றுப்படி, இந்த திருத்தங்கள் நீட்டிக்கப்பட்ட பொலிஸ் தடுப்புக்காவல் தொடர்பான பிரிவுகளையும், மேற்பார்வை அதிகாரங்கள் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தை பிரதியிடுவதையும் உள்ளடக்கியுள்ளன.